இந்தியா

இப்போது வரை என்னிடம் சைக்கிள்கூட இல்லை: விவசாயியிடம் பகிர்ந்த பிரதமர் மோடி

Published On 2023-12-01 10:24 GMT   |   Update On 2023-12-01 10:24 GMT
  • பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் விவசாயியிடம் காணொலியில் பேசினார்.
  • அப்போது பேசிய மோடி உங்களிடம் டிராக்டர் இருக்கிறது, என்னிடம் சைக்கிள் கூட இல்லை என்றார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசின் விவசாய கடன் அட்டை, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்களையும், பயனாளிகள் அதனை நினைவுகூரும் வகையிலும் விளம்பர பிரசாரம் ஒன்றை நடத்திவருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக சமீபத்தில் கலந்துரையாடினார்.

ரங்பூர் கிராம சர்பஞ்ச் பல்வீர் கவுர் என்பவருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது விவசாய கடன் அட்டையைப் பயன்படுத்தி டிராக்டர் வாங்கியதைப் பற்றி சர்பஞ்ச் பல்வீர் கவுர் பெருமையுடன் கூறினார்.

அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, உங்களிடம் டிராக்டர் இருக்கிறது. என்னிடம் சொந்தமாக சைக்கிள்கூட இல்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News