ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ரஜினிகாந்தை கேலி செய்திருக்க கூடாது- நடிகர் பவன் கல்யாண் வேதனை
- முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம்.
- என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.
திருப்பதி:
ஜனசேனா கட்சியின் (ஜேஎஸ்பி) தலைவர், நடிகர் பவன் கல்யாண் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடுவை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதை எதிர்க்கும் மக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படையாகக் கூறமாட்டார்கள்.
திரைப்படத் துறை வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசியல் சார்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை எச்சரிக்கையாக உள்ளன.
"முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம். இருப்பினும், திரையுலகில் உள்ளவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு அன்றாடம் போராட வேண்டிய சொந்தப் பிரச்சனைகள் உள்ளன.
மறைந்த ஆந்திர சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மற்றும் பிரபல குணச்சித்திர நடிகர் எம். பிரபாகர் ரெட்டி ஆகியோர் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள். என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.
சந்திரபாபு நாயுடு செய்த நல்ல பணியை ஆதரித்ததற்காக, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் போன்ற ஒரு நட்சத்திரத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கேலி செய்திருக்க கூடாது. அது துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.