புதுச்சேரி

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

Published On 2024-10-23 09:24 GMT   |   Update On 2024-10-23 09:24 GMT
  • மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளன.
  • புதுச்சேரி அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி:

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, மளிகைப் பொருட்கள், பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் கடை வீதிகள் கூட்டமாகக் காணப்படுகின்றன. பொதுமக்களின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளன.

இதற்கிடையே, புதுச்சேரி அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

Tags:    

Similar News