புதுச்சேரி

புதுச்சேரியின் புதிய ஆளுநர் கே.கைலாஷ்நாதன் ஆக.7ல் பதவியேற்பு

Published On 2024-08-03 11:52 GMT   |   Update On 2024-08-03 11:52 GMT
  • கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.
  • புதுச்சேரி ராஜ்நிவாஸில் பதவி ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய ஆளுநர்களை நியமித்தார்.

அதன்படி, குஜராத்தில் 2013 முதல் 2014 வரை அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாஷ்நாதன் புதுச்சேரியின் லெப்டினன்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநராக ஓய்வு கைலாசநாதன் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரி ராஜ்நிவாஸில் பதவி ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News