செய்திகள் (Tamil News)

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

Published On 2017-01-25 10:22 GMT   |   Update On 2017-01-25 10:23 GMT
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் உள்ளிட்ட 2௦ பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லி:

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூசன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இடம் பெற்றுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். அவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி அசத்தினார்.

இதேபோல கடந்தாண்டு சிறப்பாக விளையாடி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், பார்வையற்றோருக்கான இந்திய அணியின் கேப்டன் சேகர் நாயக் மற்றும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பி.வி.சிந்து ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Similar News