செய்திகள் (Tamil News)

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச்

Published On 2017-05-12 04:46 GMT   |   Update On 2017-05-12 04:46 GMT
ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜோகோவிச் (செர்பியா) ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபெஸ்சை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
மாட்ரிட் :

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-5 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபெஸ்சை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரரை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கனடாவின் மிலோஸ் ராவ்னிச்சை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.



பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீராங்கனை பவுச்சர்ட் 6-3, 5-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது அவரை எதிர்த்து ஆடிய ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் காயம் காரணமாக விலகினார்.

இதனால் பவுச்சர்ட் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)-யரோஸ்லாவா ஸ்வெடோவா (கஜகஸ்தான்) ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது.

Similar News