செய்திகள் (Tamil News)

உலக லெவன் அணியில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்

Published On 2018-05-03 12:36 GMT   |   Update On 2018-05-03 12:36 GMT
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் உலக லெவன் அணியில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளனர். #ICCWorldXI #WI
இர்மா, மரியா ஆகிய இரண்டு புயல்கள் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் கிரிக்கெட் மைதானங்களும் அடங்கும். இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில் மே 31-ந்தேதி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டி20 போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக லெவன் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இதற்கான உலக லெவன் அணியில் ஷாகித் அப்ரிடி, சோயிப் மாலிக், திசாரா பெரேரா, தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் விளையாட சம்மதம் தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில் இந்தியாவின் முன்னணி வீரர்களாக ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் உலக லெவன் அணியில் விளையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஐசிசி உறுதி செய்துள்ளது. இவர்களுடன் 9 பேர் உலக லெவன் அணியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள வீரர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். உலக லெவன் அணிக்கு மோர்கன் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

Similar News