செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி - இந்திய அணிக்கு 620 வீரர்-வீராங்கனைகள் தேர்வு

Published On 2018-06-03 06:25 GMT   |   Update On 2018-06-03 06:25 GMT
இந்தோனேசியாவில் நடக்க இருக்கும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் 620 வீரர்-வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. #AsianGames2018
புதுடெல்லி:

ஆசிய விளையாட்டுப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள இன்ஜியான் நகரில் நடந்தது.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா - பலேம்பங்க் நகரங்களில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் 620 வீரர்-வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 273 அதிகாரிகள் உள்பட 900 பேர் அடங்கிய அணி பங்கேற்க இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிநகர் பத்ரா தெரிவித்துள்ளார். 2370 பேர் கொண்ட உத்தேச பட்டியலில் இருந்து 900 பேர் குறைக்கப்பட்டு அணி இறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2014-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 541 பேர் கொண்ட அணி கலந்து கொண்டு 28 பிரிவுகளில் பங்கேற்று 57 பதக்கங்களை வென்றது. #AsianGames2018
Tags:    

Similar News