செய்திகள்

புரோ கபடி லீக்கின் 6-வது சீசன் அக்டோபர் 5-ந்தேதி தொடங்கி 90 நாட்கள் நடக்கிறது

Published On 2018-07-30 13:06 GMT   |   Update On 2018-07-30 13:06 GMT
புரோ கபடி லீக் தொடரின் 6-வது சீசன் அக்டோபர் 5-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி வரை 90 நாட்கள் நடைபெறுகின்றன. #ProKabaddiLeague
இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் தொடரை ஆரம்பித்தது. இது ரசிகர்கள் இடையே கடும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கால்பந்து, டென்னிஸ், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளிலும் லீக் தொடங்கப்பட்டது.

இந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்று கிடைக்க தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரின் 6-வது சீசன் அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. சுமார் 90 நாட்கள் நடைபெற்றும் இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது.



மக்களிடையே சிறப்பான வரவேற்பு இருந்ததால் கடந்த சீசனில் 8 அணியில் இருந்து 12 அணிகளாக அதிகரிக்கப்பட்டது. இந்த தொடரை 313 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். கிரிக்கெட்டை தவிர்த்து இந்தியாவில் கபடி போட்டியைத்தான் இவ்வளவு பேர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News