செய்திகள் (Tamil News)
மிதாலி ராஜ்

இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Published On 2019-09-03 09:16 GMT   |   Update On 2019-09-03 09:16 GMT
இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ். இவர் 32 டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். முன்னணி வீராங்கனையாக திகழ்ந்து வந்த நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓயு்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மிதாலி ராஜ் 89 டி20 போட்டிகளில் 84 இன்னிங்சில் பேட்டிங் செய்து 2364 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 17 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Similar News