விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: தங்கம் வெல்லும் முன்பு களத்திலேயே தூங்கிய உக்ரைன் வீராங்கனை

Published On 2024-08-05 16:25 GMT   |   Update On 2024-08-05 16:25 GMT
  • உயரம் தாண்டுதல் போட்டியில் யாரோஸ்லாவா மகுச்சி தங்கப் பதக்கம் பெற்றார்.
  • இந்த வெற்றியை உக்ரைனுக்கு அவர் அர்பணித்துள்ளார்.

பாரீஸ்:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற உக்ரைன் வீராங்கனை யாரோஸ்லாவா மகுச்சி, போட்டியில் பங்கேற்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, களத்திலேயே தியானம் செய்வது போன்று படுத்து உறங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

தங்கம் வென்ற பின்பு களத்தில் தூங்கியது குறித்து பேசிய யாரோஸ்லாவா, மேகங்களை பார்ப்பது, 1,2,3,4... என எண்ணுவது, குட்டி தூக்கம் போடுவது போன்றவற்றால் மனது நிதானமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வெற்றியை உக்ரைன் நாட்டிற்கு அவர் அர்பணித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

Tags:    

Similar News