தொடர்ச்சியாக இரண்டு சதம்.. அடுத்த 2 போட்டிகளில் டக் அவுட் ஆன சஞ்சு சாம்சன்
- சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 2 ஆவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகியிருந்தார்
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 2 ஆவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகியிருந்தார்.
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் அடித்து சஞ்சு சாம்சன் அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.
தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் எடுத்துவிட்டு அடுத்த 2 போட்டிகளில் டக் அவுட்டாகி சஞ்சு சாம்சன் அதிர்ச்சி அளித்துள்ளார்.