கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ரபாடா சாதனை

Published On 2024-10-21 12:47 GMT   |   Update On 2024-10-21 12:47 GMT
  • வங்கதேசம் - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
  • இந்த டெஸ்ட் போட்டியில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.

உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா படைத்தார்.

இதற்கு முன்பு பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 12602 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்து 11817 பந்துகளிலேயே ரபாடா 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Tags:    

Similar News