கிரிக்கெட் (Cricket)

ஜாம்நகர் அரச சிம்மாசனத்தின் வாரிசாக அஜய் ஜடேஜா அறிவிப்பு

Published On 2024-10-12 06:56 GMT   |   Update On 2024-10-12 06:56 GMT
  • அஜய் தனது வாரிசாக வருவதற்கு ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • ஜாம்நகர் மக்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவின் தந்தை தௌலட்சின்ஜி ஜடேஜா ஜாம்நகர் மக்களவையில் இருந்து மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தாயார் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர். ஜடேஜா, ஜெயா ஜெட்லியின் மகள் அதிதி ஜெட்லியை மணந்தார்.தம்பதியருக்கு ஐமன் மற்றும் அமீரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அரச குடும்பம் பின்னணியைக் கொண்ட அஜய் ஜடேஜா ஜாம்நகரின் அரச சிம்மாசனத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நவாநகரைச் சேர்ந்த ஜாம் சாஹேப், சத்ருசல்யாசின்ஹ்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜா, ஒரு கடிதத்தில், அஜய் தனது வாரிசாக வருவதற்கு ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சத்ருசல்யாசின்ஹ்ஜி அஜய்யின் தந்தையின் உறவினர் சகோதரர்.

இதுதொடர்பான கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தசரா கொண்டாட்டம் - ஜம்சாஹேப் தசரா நாள் என்பது பாண்டவர்கள் தங்கள் இருப்பை மறைத்து 14 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்து வெற்றி பெற்ற நாளாக நம்பப்படுகிறது.

இன்று, தசரா அன்று, நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் எனது நீண்ட நாள் யோசனைக்கு தீர்வைக் கண்டுபிடித்துவிட்டேன். எனது வாரிசாக அஜய் ஜடேஜாவை அறிவிப்பது தான் அது.

ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக்கொண்டது ஜாம்நகர் மக்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்.

அஜய் ஜடேஜாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெய் ஜடேஜா 1992 முதல் 2000 வரை இந்தியாவுக்காக 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News