கிரிக்கெட்

கடைசி டி20-யிலும் வெற்றி: ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி

Published On 2024-09-08 02:20 GMT   |   Update On 2024-09-08 02:20 GMT
  • ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
  • 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 62 ரன்கள் குவித்த கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ப்ரெண்டன் மெக்முல்லன் 56 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சார்பில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 62 ரன்கள் குவித்த கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

Tags:    

Similar News