கிரிக்கெட் (Cricket)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் மீண்டும் விலகல்
- டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.
- டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து.
இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
பணிச்சுமை அதிகமாக உள்ளதால் கேப்டன்சியில் இருந்து விலகி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.