கைல் வெர்ரேய்ன் சதம்: தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்
- கைல் வெர்ரேய்ன் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 106 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 140 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கைல் வெர்ரேய்ன் 18 ரன்னிலும் வியான் முல்டர் 17 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் தொடங்கியது. இருவரும் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தனர். முல்டர் 54 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த மகாராஜ் 0 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் வெர்ரேய்ன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.