கிரிக்கெட் (Cricket)

'மேஜர் மிஸ்ஸிங்': 2025 ஐபிஎல்-இல் டோனி? சிஎஸ்கே பதிவால் ரசிகர்கள் குழப்பம்

Published On 2024-09-11 11:22 GMT   |   Update On 2024-09-11 11:22 GMT
  • டோனியின் நெம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து 'மேஜர் மிஸ்ஸிங்' என சிஎஸ்கே அணி பதிவிட்டுள்ளது.
  • இந்த எக்ஸ் பதிவு டோனி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.

அதே சமயம், எம்.எஸ்.டோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், டோனியின் நெம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து 'மேஜர் மிஸ்ஸிங்' எனப் பதிவிட்டுள்ளனர்.

இந்த எக்ஸ் பதிவு டோனி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் டோனி ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்றும் மறு தரப்பினர் சிஎஸ்கே ஜெர்ஸி மாறப்போகிறது அதனால் தான் இப்படி பதிவிட்டுள்ளார்கள் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை இதுகுறித்து எவ்வித விளக்கமும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் வரவுள்ளார் என்று கூறப்படும் நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் டோனியின் ஓய்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்றே கூறப்படுகிறது.

Tags:    

Similar News