ஜேமி ஸ்மித் அபார சதம்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்
- முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னும், அட்கின்சன் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஹாரி ப்ரூக்56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்ம், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.