கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் திடீர் விலகல்

Published On 2024-10-05 22:29 GMT   |   Update On 2024-10-05 22:29 GMT
  • இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
  • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

கராச்சி:

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அக்டோபர் 7-ம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன.

இதற்கிடையே, பாகிஸ்தான் சென்றடைந்த இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை.

காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை என கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் செயல்படவுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட ஜாக் கிராலி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News