கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

Published On 2024-09-27 03:26 GMT   |   Update On 2024-09-27 03:26 GMT
  • இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
  • அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான உயரமான வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹல் வரவிறுக்கும் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி உள்ளார். காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News