கிரிக்கெட் (Cricket)

சூப்பர்மேன் கேட்ச் பிடித்த ஹிட்மேன்.. வைரலாகும் வீடியோ

Published On 2024-09-30 05:59 GMT   |   Update On 2024-09-30 05:59 GMT
  • லிட்டன் தாஸ் 30 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • இவரது விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.

கான்பூர்:

இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மழையால் முதல் நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நேற்று ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்தது.

இன்றைய 4-வது நாள் ஆட்டம் மழை எதுவும் இல்லாததால் போட்டி திட்டமிட்டபடி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மொமினுல் ஹக்கும், முஷ்பி குர் ரகீமும் தொடர்ந்து ஆடினார்கள். ஸ்கோர் 112 ஆக இருந்த போது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். முஷ்பிகுர் ரகீம் 11 ரன்னில் அவரது பந்தில் போல்டு ஆனார்.

இதனையடுத்து மொமினுல் -லிட்டன் தாஸ் பொறுமையாக விளையாடினார்கள். விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். அப்போது ரோகித் சர்மா லிட்டன் தாஸை அவுட் செய்ய ஒரு புது யுக்தியை கையில் எடுத்தார். அந்த வகையில் லிட்டன் தாஸ் அருகில் விராட் கோலியை பீல்டிங் நிற்க சொன்னார். இதனால் தடுப்பாட்டாம் ஆடுவதில் சிரமமாக இருந்தது.

உடனே அடுத்தை பந்தை இறங்கி வந்து தாஸ் அடித்தார். இதை லாங் ஆப் திசையில் இருந்த ரோகித் சர்மா ஒற்றை கையில் பிடித்து அசத்தினார். இதனை பார்த்த சிராஜ், விராட், கில் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை கட்டியணைத்து பாராட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News