கிரிக்கெட் (Cricket)
null

முதல் இந்திய பேட்ஸ்மேன்... விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்ட்யா

Published On 2024-10-07 06:20 GMT   |   Update On 2024-10-07 06:54 GMT
  • நேற்றோடு மொத்தம் 5 போட்டிகளில் இந்திய அணியை சிக்ஸ் அடித்து பாண்ட்யா வெற்றி பெற வைத்துள்ளார்.
  • டி20-யில் 87 விக்கெட்டுகள் வீழ்த்தி அர்ஷ்தீப் சிங்கை முந்தியுள்ளார். சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதல் இடம்.

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 19.5 ஓவரில் 127 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா 11.5 ஓவரில் சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 16 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கீப்பருக்கு பின்னால் அடித்த ஷாட் குறித்து அனைவரும் பேசி வருகிறார்கள்.

இதற்கிடையே ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இப்படி ஐந்தாவது முறையாக சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

இதற்கு முன் டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 4 முறை இவ்வாறு செய்துள்ளார். தற்போது ஹர்திக் பாண்ட்யா 5-வது முறையாக வெற்றி பெற வைத்து முதல், இந்திய அணியை சிக்ஸ் அடித்து அதிகமுறை வெற்றி பெற வைத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அத்துடன் ஒரு விக்கெட் வீழ்த்தியன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 87 விக்கெட்டுகள் வீழ்த்தி அர்ஷ்தீப் சிங்கை முந்தியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 86 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News