கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்டில் மிக கடினமான பந்துவீச்சாளர் இவர் தான்: மனம் திறந்த கிளாசன்

Published On 2024-11-12 15:12 GMT   |   Update On 2024-11-12 15:12 GMT
  • முதல் இரு போட்டிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
  • இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

செஞ்சூரியன்:

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2வது போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசென் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டி வில்லியர்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் பின்புறம் விளையாடுவதில் தனித்துவமானவர்கள்.

இவர்கள் இருவரும் விளையாடும் விதத்தில் கலவையான ஒரு ஷாட்டை நான் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்.

இருவரும் பந்தை பின்புறமாக நேராக அடிக்கக் கூடியவர்கள். சூர்யகுமார் பைன் லெக்கில் அடிக்கும் சுப்லா ஷாட் எனக்கு வேண்டும்.

நான் இப்படியான ஷாட்டை விளையாடியது இல்லை. கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் ஹசிம் அம்லா.

தற்போது டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை சதத்தை அடிக்கக்கூடிய வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் இருப்பார்.

டி20 கிரிக்கெட்டில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான் என தெரிவித்தார்.

Tags:    

Similar News