கிரிக்கெட் (Cricket)
null

டெல்லி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம்

Published On 2024-10-17 10:15 GMT   |   Update On 2024-10-17 14:21 GMT
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் சமீபத்தில் நீக்கப்பட்டார்.
  • ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான மெகா ஏலம் நவம்பர் இறுதியில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சியாளர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய பயிற்சியாளர் தேடும் பணியில் அந்த அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியது.

இந்த நிலையில் டெல்லி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேலை பந்து வீச்சு பயிற்சியாளர் பணிக்கு கொண்டு வரவும் அந்த அணி திட்டமிட்டுள்ளது. 

இன்னொரு பக்கம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார்-யாரை தக்க வைக்கலாம் என்பதிலும் டெல்லி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. கேப்டன் ரிஷப் பண்ட் (ரூ.18 கோடி), ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் (ரூ.14 கோடி), இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (ரூ.11 கோடி) ஆகியோர் உறுதியாக தக்கவைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஜாக் பிராசெர் மெக்குர்க், டிரிஸ்டான் ஸ்டப்சையும் குறி வைத்துள்ளது.

Tags:    

Similar News