இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் வில்லியம்சன் விலகல்
- வில்லியம்சன் 100 சதவீதம் முழு உடல் தகுதியுடன் இல்லை.
- 3-வது டெஸ்டில் விளையாடுவதற்கு முன்னேற்றம் காண்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
புனே:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் வருகிற 24 -ந்தேதி மராட்டிய மாநிலம் புனேயில் தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியம்சன் இந்த டெஸ்டிலும் ஆட மாட்டார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பெங்களுருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆட வில்லை.
இடுப்பு வலியில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் வில்லியம்சன் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
வில்லியம்சன் 100 சதவீதம் முழு உடல் தகுதியுடன் இல்லை. அவரை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றும், 3-வது டெஸ்டில் விளையாடுவதற்கு முன்னேற்றம் காண்பார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நவம்பர் 1-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது.