கிரிக்கெட் (Cricket)

2-வது டெஸ்ட்: துருவ் அரை சதம்.. ராகுல் ஏமாற்றம்.. 161 ரன்னில் சுருண்ட இந்திய ஏ அணி

Published On 2024-11-07 05:24 GMT   |   Update On 2024-11-07 05:24 GMT
  • அபிமன்யூ, சாய் சுதர்சன் ஆகியோர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
  • ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

மெல்போர்ன்:

இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ'அணிகள் இடையே 4 நாள் போட்டிக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய 'ஏ' அணியின் தொடக்க வீரர்களாக அபிமன்யூ- கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அபிமன்யூ டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 2-வது ஓவரில் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து கேப்டன் 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் இந்திய அணி 11 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து படிக்கல் மற்றும் ஜூரெல் நிதானமாக விளையாடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். ஆனால் ரொம்ப நேரம் அது தொடரவில்லை. படிக்கல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் நிதிஷ் ரெட்டி 16, தனுஷ் கோட்யான் 0, கலீல் அகமது 1, பிரசித் கிருஷ்ணா 14 என விக்கெடுகளை பறிகொடுத்தனர். ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரெல் அரை சதம் அடித்ததுடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

Tags:    

Similar News