துலீப் கோப்பை: மனவ் சுதார் அபாரம்-இந்தியா சி அணி வெற்றி
- இந்தியா சி அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- அந்த அணி 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்து வென்றது.
அனந்தபூர்:
துலீப் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி விளையாடியது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா டி அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அக்சர் படேல் 86 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய இந்தியா சி அணி 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித் 72 ரன்கள் அடித்தார்.
4 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா டி அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 56 ரன்னும், ஷ்ரேயாஸ் 54 ரன்னும் சேர்த்தனர்.
இந்தியா சி அணி சார்பில் மனவ் சுதார் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியா சி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா சி அணி 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் அடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆர்யன் ஜுயல் 47 ரன்களும், கெய்க்வாட் 46 ரன்களும் அடித்தனர்.
ஆட்ட நாயகன் விருது மனவ் சுதாருக்கு அளிக்கப்பட்டது.