சேப்பாக்கம் டெஸ்ட்: 92 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது.. இந்தியா அபாரம்
- இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
- முதலாவது டெஸ்ட் போட்டியில் 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இது இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியின் நான்காம் நாளான இன்று இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் இரு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதோடு, 92 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு கட்டியுள்ளது. இந்திய அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை 1932 ஆம் ஆண்டு விளையாடியது. சிகே நாயுடு தலைமையிலான இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அன்று துவங்கி இன்று வரை இந்திய அணி பெற்ற வெற்றிகளை விட தோல்விகள் அதிகளவில் இருந்து வந்தன. எனினும், இன்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த நிலையை மாற்றியுள்ளது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 179 போட்டிகளில் வெற்றிலும், 178 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி பெற்ற அணிகள் பட்டியல்:
ஆஸ்திரேலியா: வெற்றிகள் 414, தோல்விகள் 232
இங்கிலாந்து: வெற்றிகள் 397, தோல்விகள் 325
தென் ஆப்பிரிக்கா: வெற்றிகள் 179, தோல்விகள் 161
இந்தியா: வெற்றிகள் 179, தோல்விகள் 178
பாகிஸ்தான்: வெற்றிகள் 148, தோல்விகள் 144