கிரிக்கெட் (Cricket)
எதிரணியை அதிக முறை ஆல் அவுட் செய்த இந்தியா: பாகிஸ்தான் சாதனை சமன்
- இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் நடந்தது.
- இதில் இந்தியா வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
போபால்:
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று குவாலியரில் நடைபெற்றது. முதலில் ஆடிய வங்கதேசம் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 11.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது அர்ஷ்தீப் சிங்குக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிரணியை அதிக முறை ஆல் அவுட் ஆக்கிய அணி என்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 கிரிக்கெட்டில் 42 முறை எதிரணியை ஆல் அவுட்டாக்கி உள்ளது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து 3வது இடத்தில் உள்ளது.