null
நியூசிலாந்துக்கு எதிராக தொடரை இழந்த இந்தியா.. கட்டுப்பாடுகளை விதித்த பிசிசிஐ
- 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது.
- தீபாவளி விடுமுறையையும் அணி நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இதனால் இந்திய அணி மீது விமர்சனம் எழுந்தது. முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ரோகித் சர்மா தவறுகளை சுட்டிகாட்டினர்.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன், இந்திய அணி நிர்வாகம் வீரர்கள் எந்த விதமான தளர்வுகளையும் அளிக்கும் மனநிலையில் இல்லை. எனவே, வீரர்களின் தீபாவளி விடுமுறையையும் அணி நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது.
அதன்படி இந்திய அணி வீரர்கள் எதிர்வரும் அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் பயிற்சியில் ஈடுபடும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வீரர்கள் அனைவரும் நாளைய தினம் மும்பை வரவேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து உத்திரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பயிற்சியில் எந்தவொரு வீரருக்கு விடுப்போ அல்லது ஓய்வோ கிடையாது என்பதையும் பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.