கிரிக்கெட் (Cricket)
null

இந்தியா- வங்கதேசம் 2-வது டெஸ்ட்: டாஸ் சுண்டுவதில் தாமதம்

Published On 2024-09-27 03:42 GMT   |   Update On 2024-09-27 03:43 GMT
  • மழைக்காரணமாக அவுட் பீல்டு ஈரப்பதமாக காணப்படுகிறது.
  • 9.30 மணிக்கு நடுவர்கள் ஆய்வு செய்து, அதன்பின் முடிவு எடுப்பார்கள்.

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கான்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கான டாஸ் சரியாக 9 மணிக்கு சுண்டப்படும். ஆனால் இன்று காலை லேசான மழை பெய்ததாக தெரிகிறது.

இதனால் அவுட்-பீல்டு ஈரப்பதாக இருப்பதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 9.30 மணிக்கு மைதானத்தில் ஆய்வு செய்த பின் நடுவர்கள் போட்டி தொடங்கும் நேரத்தை முடிவு செய்வார்கள்.

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் அஸ்வினும் 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் சதம் விளாசினர். 2-வது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட் வீழ்த்தியதுடன் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

Tags:    

Similar News