கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் 2025: ஆலோசனை கூட்டத்தில் கண்டீஷன் போட்ட காவ்யா மாறன்?

Published On 2024-08-01 07:43 GMT   |   Update On 2024-08-01 07:53 GMT
  • ஆலோசனை கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
  • நீண்ட நேர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியினரும், தங்களது விருப்பங்களை கோரிக்கையாக முன்வைத்தன. இது தொடர்பாக நீண்ட நேர ஆலோசனை நடைபெற்றதாகவும், அப்போது சலசலப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணிக்காக சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அப்போது, அணியில் அதிகபட்சம் ஏழு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இவர்களில் இந்திய வீரர்கள், உள்ளூர் வீரர்கள், சர்வதேச வீரர்கள் என எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது.

ஏலத்தின் போது வீரர்களை தக்க வைத்துக் கொள்வது தொடர்பாக வீரர்களுடன் ஆலோசிக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும் என்பது போன்றவற்றை வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News