கிரிக்கெட் (Cricket)

நீங்க வந்தா மட்டும் போதும்.. பாகிஸ்தானில் நடக்கும் ஐசிசி தொடர்.. இந்தியா பங்கேற்க சூப்பர் ஐடியா!

Published On 2024-10-19 03:10 GMT   |   Update On 2024-10-19 03:12 GMT
  • பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து பேசினார்
  • லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் வைத்து நடைபெற உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்புவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்ற சூழலே நிலவுகிறது.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் [PCB] தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் இந்திய அணி தொடரில் பங்கேற்பதற்காக வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் பிசிசிஐ -க்கு பிசிபி கூறிய திட்டம் என்னவென்றால், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் இந்திய அணி இந்தியாவுக்கு திரும்பலாம். பின்னர் அடுத்த போட்டிக்கு மீண்டும் பாகிஸ்தான் வரலாம். இவ்வாறு ஒவ்வொரு போட்டியின்போதும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமாக சென்று சென்று வரும் திட்டத்தை பிசிபி கூறியுள்ளது.

தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு இடையில் குறைந்தது ஒரு வார இடைவெளி இருப்பதால் இது சாதியாமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணி சண்டிகர் விமான நிலையம் அல்லது டெல்லி விமான நிலையம் திருப்ப ஏதுவாக இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திட்டத்தை பிசிசிஐ ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

Similar News