கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ள முதல் இத்தாலி வீரர்

Published On 2024-11-06 07:47 GMT   |   Update On 2024-11-06 07:47 GMT
  • மும்பை இந்தியன்ஸ் ILT20-ன் சமீபத்திய சீசனுக்காக அவரை ஒப்பந்தம் செய்தது.
  • உலக அளவில் 104 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள்.

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து 10 அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

965 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக இந்திய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். அதே போல உலக அளவில் 104 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள்.

இந்நிலையில் முதல் முறையாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த தாமஸ் டிராகா இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார். 24 வயதான அவர், பல நாடுகளில் லீக் கிரிக்கெட் அனுபவம் பெற்றவர். அவர் ஏலப் பதிவில் 345-வது இடத்தில் உள்ளார் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் இத்தாலியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

டிராகா 2024 குளோபல் டி20 கனடாவில் பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணிக்காக விளையாடினார், அங்கு அவர் ஆறு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்தார். அவரது திறமையை உணர்ந்த மும்பை இந்தியன்ஸ் ILT20-ன் சமீபத்திய சீசனுக்காக அவரை ஒப்பந்தம் செய்தது.

Tags:    

Similar News