கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜோ ரூட்

Published On 2024-10-09 11:38 GMT   |   Update On 2024-10-09 11:38 GMT
  • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 150 ரன்களை கடந்து ஆடி வருகிறார்.
  • ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஜோ ரூட். இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார்.

ரூட் இப்போட்டியில் 71 ரன்களை அடித்தபோது அலஸ்டர் குக்கை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அலாஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,472 ரன்கள் அடித்துள்ளார். ஜோ ரூ தனது 147 ஆவது டெஸ்ட் போட்டியில் 12,554* ரன்கள் அடித்துள்ளார்.

முன்னதாக ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள்:

சச்சின் டெண்டுல்கர்: போட்டிகள்: 200 | ரன்கள்: 15,921 | சதம்: 51 | சராசரி: 53.78

ரிக்கி பாண்டிங்: போட்டிகள்: 168 | ரன்கள்: 13,378 | சதம்: 41 | சராசரி: 51.85

ஜாக் காலிஸ்: போட்டிகள்: 166 | ரன்கள்: 13,289 | சதம்: 45 | சராசரி: 55.37

ராகுல் டிராவிட்: போட்டிகள்: 164 | ரன்கள்: 13,288 | சதம்: 36 | சராசரி: 52.31

ஜோ ரூட்: போட்டிகள்: 147* | ரன்கள்: 12,473 | சதம்: 34 | சராசரி: 50.91

அலஸ்டர் குக்: போட்டிகள்: 161 | ரன்கள்: 12,472 | சதம்: 33 | சராசரி: 45.35

Tags:    

Similar News