கிரிக்கெட் (Cricket)

ஷ்ரேயாஸ் அய்யரைத்தான் முதலில் தக்கவைக்க நினைத்தோம்: ஆனால்... உண்மையை உடைத்த கே.கே.ஆர். சிஇஓ

Published On 2024-11-02 04:51 GMT   |   Update On 2024-11-02 04:51 GMT
  • ஷ்ரேயாஸ் அய்யர் ஏலத்தில் தனது விலையை பரிசோதிக்க விரும்பினார்.
  • இனிமேல் ரசிகர்கள் எங்களை விமர்சிக்கமாட்டார்கள் என நம்புகிறோம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ஷ்ரேயாஸ் அய்யர். இவரது தலைமையில் கொல்கத்தா அணி 2024 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது.

2025-ம் ஆண்டு மெகா ஏலத்திற்கான கொல்கத்தா அணியின் வீரர்கள் தக்க வைத்துக்கொள்ளும் பட்டியலில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்கவில்லை. கோப்பையை வென்று கொடுத்தவரை வெளியேற்றலாமா? என கொல்கத்தா அணியை மீது கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை ஏலத்தில் எடுக்காததற்கான உண்மையான காரணத்தை அந்த அணியின் சி.இ.ஓ. வெங்கி மைசூர் விவரித்துள்ளார்.

இது தொடர்பாக வெங்கி மைசூர்

எங்களுடைய தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் பட்டியலில் ஷ்ரேயாஸ் அய்யர்தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். அவர்தான் கேப்டன். அவரை சுற்றின் எல்லாம் கட்டமைக்கப்படும். 2022-ல் அதற்காகத்தான் அவரை நாங்கள் ஏலத்தில் எடுத்தோம்.

தற்போது அவர் தக்கவைத்துக் கொள்ளும் பட்டியலில் இல்லாததற்கு அவரே காரணம். கொல்கத்தா அணி அல்ல. ஏலத்தில் அவருடைய மார்க்கெட் விலை என்ன? என்பதை பரிசோதிக்க விரும்பினார். இதுதான் அவர் பட்டியலில் இருந்து வெளியேற காரணமாக இருந்தது.

இனிமேல் ரசிகர்கள் ஷ்ரேயாஸ் அய்யருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று சொல்லமாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவரை முதல் நபராக தக்கவைத்துக் கொள்ள விரும்பினோம். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு தக்கவைப்புக்கு அடிப்படையான விஷயம் என்னவென்றால், அது பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் விஷயம். இது ஒருதலைப்பட்சமான உரிமை அல்ல. வீரர் மற்றும் அணி பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டும்.

எங்காவது, அந்த ஒப்பந்தம் பாதிக்கப்படுகிறது என்றால் அது பணம் அல்லது தங்களது மதிப்பை டெஸ்ட் செய்ய விரும்புகிறார்கள் என்பதால்தான். இது முடிவை பாதிக்கிறது. இந்த விஷயத்தில், இது சிறந்தது என்று அவர் உணர்ந்தார், மேலும் ஏலத்திற்குச் சென்று அவர்களின் மதிப்பைச் சோதிக்கும் போது நாங்கள் எப்போதும் வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

இவ்வாறு வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News