கிரிக்கெட்

வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தது ஏன்?: பாகிஸ்தான் கேப்டன் விளக்கம்

Published On 2024-08-25 12:49 GMT   |   Update On 2024-08-25 12:50 GMT
  • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
  • ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

ராவல்பிண்டி:

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கூறியதாவது:

ராவல்பிண்டி பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் அமையவில்லை. இந்த பிட்ச் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது.

முதல் இன்னிங்சை 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய முடிவுஎடுக்கப்பட்டது. டிக்ளேர் செய்ததற்கான காரணம் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான்.

ஆனால் வங்கதேச வீரர்கள் முதல் இன்னிங்சில் மிகவும் ஒழுக்கத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தினர். முஷ்பிகுர் மற்றும் மிராஸ் நன்றாக பேட்டிங் செய்தனர்.

பந்துவீச்சிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடரை சமன் செய்ய முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News