கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்

Published On 2024-10-27 18:06 GMT   |   Update On 2024-10-27 18:06 GMT
  • பாகிஸ்தான் அணி கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகினார்.
  • புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

லாகூர்:

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததால், கேப்டன் பதவியை பாபர் அசாம் ராஜினாமா செய்தார். இதனால் ஷாஹீன் அப்ரிடி டி20, ஒருநாள் பாகிஸ்தான் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷான் மசூத் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார்.

ஆனால் டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாபர் அசாம் மீண்டும் டி20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News