கிரிக்கெட்

10 ரன்னில் ஆல் அவுட்: டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை சமன்செய்த மங்கோலியா

Published On 2024-09-05 08:55 GMT   |   Update On 2024-09-05 08:55 GMT
  • முதலில் ஆடிய மங்கோலிய வீரர்கள் மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
  • இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை படைத்தது.

கோலாலம்பூர்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. தற்போது இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூர், மங்கோலியா அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்றுப் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற சிங்கப்பூர் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய மங்கோலியா வீரர்கள், மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 10 ஓவரில் 10 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை மங்கோலியா சமன் செய்தது.

சிங்கப்பூர் சார்பில் பரத்வாஜ் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து ஆடிய சிங்கப்பூர் ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Tags:    

Similar News