கிரிக்கெட் (Cricket)

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முனாப் பட்டேல் நியமனம்

Published On 2024-11-12 15:05 GMT   |   Update On 2024-11-12 15:05 GMT
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார்.
  • ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான மெகா ஏலம் நவம்பர் இறுதியில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சியாளர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணி அக்சர் பட்டேலை ரூ.16.50 கோடிக்கும் குல்தீப் யாதவை ரூ.13.25 கோடிக்கும் தென் ஆஃப்ரிக்க வீரர் ஸ்டப்சை ரூ.10 கோடிக்கும் அபிஷேக் போரெலை ரூ.4 கோடிக்கும் என மொத்தம் நான்கு பேரை ரூ.47 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது. டெல்லி அணியின் கையில் 73 கோடியும் 2 RTM கார்டுகளும் கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News