கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள்: சாதனை படைத்த முஷ்பிகுர் ரஹீம்
- முதலில் பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 106 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டாக்கா:
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 106 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
202 ரன்கள் பின்தங்கிய நிலையில், வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. மஹமதுல் ஹசன் 38 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக 6,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்தார்
முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 11 சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.