கிரிக்கெட் (Cricket)

கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2024-11-28 23:06 GMT   |   Update On 2024-11-28 23:06 GMT
  • டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
  • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 348 ரன்கள் எடுத்தது.

கிறிஸ்ட்சர்ச்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே 2 ரன்னும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 34 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்களை கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து வந்த டேரில் மிட்செல் 19, டாம் பிளெண்டல் 17, நாதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து பிலிப்ஸ் - டிம் சவுதி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்திருந்தது. பிலிப்ஸ் 41 ரன்னும், சவுதி 10 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் கடந்து 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.

Tags:    

Similar News