கிரிக்கெட் (Cricket)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட நியூசிலாந்து

Published On 2024-10-20 23:39 GMT   |   Update On 2024-10-20 23:39 GMT
  • இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
  • இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் சிறிது முன்னேற்றம் கண்டது.

துபாய்:

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து நியூசிலாந்து 6வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு முன்னேறியது.

இங்கிலாந்து 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

Tags:    

Similar News