கிரிக்கெட் (Cricket)

சர்பராஸ் கான் , ரிஷப் பண்ட்-ஐ பாருங்கள்.. யோ-யோ டெஸ்ட் தேவையே இல்லை- சுனில் கவாஸ்கர்

Published On 2024-10-21 16:21 GMT   |   Update On 2024-10-21 16:21 GMT
  • இந்திய அணியில் சர்பராஸ் கானுக்கு பல வருடங்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.
  • யோயோ சோதனைகளை நிராகரித்து விட்டு ஒரு வீரர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை மதிப்பிடவும்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்திய மண்ணில் 36 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து வென்றுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்தியா ஆள் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. அதே சமயம் இரண்டாவது இன்னிங்சில் சர்பராஸ் கான் 150 ரன்களும் ரிஷப் பண்ட் 99 ரன்களும் குவித்தததால் 462 ரன்களை இந்திய அணி எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை இந்திய அணி தவிர்த்து.

சர்பராஸ் கான் உடல் பருமனாக இருக்கிறார் என்று கூறி அவருக்கு சில ஆண்டுகளாக வாய்ப்பு வழங்காமல் இருந்து வந்ததை குறிப்பிட்டு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ்டாருக்கு எழுதிய கட்டுரையில், "உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய சதங்கள் அடித்தும் இந்திய அணியில் சர்பராஸ் கானுக்கு பல வருடங்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு தேவையான மெலிதான இடுப்பு அவருக்கு இல்லை என்று அவர்கள் நம்பியதே இதற்கு காரணம். ஆனால் களத்தில் சர்பராஸ் பேட்டிங் அவருடைய இடுப்பை விட அபாரமாக இருந்தது.

துரதிஷ்டவசமாக இந்திய கிரிக்கெட்டில் பல முடிவெடுக்கும் யோசனைகள் உள்ளன. அவற்றை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. இந்த ஃபிட்னஸ் தூய்மைவாதிகள் விரும்பும் மெல்லிய இடுப்பை கொண்டிருக்காத மற்றொரு வீரர் ரிஷப் பண்ட். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். இதற்கிடையே அவர் நாள் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அதற்கு 6 மணி நேரம் உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டியது மட்டுமல்லாமல் பந்துகளை சேகரிக்க ஸ்டம்ப்புகளுக்கு ஓடுவதும் தேவைப்படுகிறது. எனவே தயவு செய்து இந்த யோயோ சோதனைகளை நிராகரித்து விட்டு ஒரு வீரர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை மதிப்பிடவும். ஒரு வீரர் நாள் முழுவதும் பேட் செய்யவோ அல்லது 20 ஓவர்கள் வீசவோ முடிந்தால் அவரது இடுப்பு எவ்வளவு மெலிதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்பது அர்த்தம்" என்று எழுதியுள்ளார்.

Tags:    

Similar News