சாத் ஷகீல் அபார சதம்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 344 ரன்களுக்கு ஆல் அவுட்
- முதலில் பேட் செய்த இங்கிலாந்து 267 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 344 ரன்கள் எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி சுமித் 89 ரன்னும், பென் டக்கெட் 52 ரன்னும், கஸ் அட்கின்சன் 39 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் அலி 3 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தானின் ஷான் மசூத் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சாத் ஷகீல் சிறப்பாக விளையாடி சதமடித்து 134 ரன்களில்ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் நோமன் அலி 45 ரன்களும், சஜித் கான் 48 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 344 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ரெஹான் அகமது 4 விக்கெட்டும், சோயப் பஷீர் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
77 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.