கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்தை துவம்சம் செய்த பாகிஸ்தான்.. 152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Published On 2024-10-18 07:52 GMT   |   Update On 2024-10-18 07:52 GMT
  • பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
  • இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்தது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 7 விக்கெட்டுகளை அள்ளினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சல்மான் அகா மட்டும் நிதானமாக ஆடி 63 ரன்களை அடித்தார். எனினும், இங்கிலாந்து அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Tags:    

Similar News