ரஞ்சி கோப்பை: ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டையும் தட்டித் தூக்கிய அன்ஷுல் கம்போஜ்
- கேரளா மற்றும் அரியானா அணிகள் இடையேயான போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டது.
- மோகன் சட்டர்ஜி மற்றும் பிரதீப் சுந்தரம் ஆகியோர் முதலில் இந்த சாதனையை படைத்திருந்தனர்.
ரஞ்சிக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கேரளா மற்றும் அரியானா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் வரலாற்று சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
அரியானா அணிக்காக விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்த சாதனையைப் படைத்துள்ளார். கேரளாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் ஒரே ஆளாக வீழ்த்தி அன்ஷூல் கம்போஜ் சாதனை படைத்துள்ளார்.
எனவே ரஞ்சி டிராபி தொடர் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அன்ஷுல் கம்போஜ் தனதாக்கியுள்ளார். இந்த போட்டியில் மொத்தம் 30.1 ஓவர்கள் பந்துவீசி 49 ரன்கள் விட்டுக் கொடுத்து 10 விக்கெட்களை அன்ஷுல் வீழ்த்தினார். இந்த போட்டியில் மொத்தமாக 9 மெய்டன் 9 மெய்டன் ஓவர்களையும் அவர் வீசியுள்ளார்.
இதற்கு முன் மோகன் சட்டர்ஜி மற்றும் பிரதீப் சுந்தரம் ஆகிய இருவரும் ரஞ்சி டிராபி தொடரில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.