கிரிக்கெட் (Cricket)

வங்கதேச அணிக்காக "பீல்டிங் செட்" செய்ததற்கு காரணம் இதுதான்... ரிஷப் பண்ட்

Published On 2024-09-23 04:24 GMT   |   Update On 2024-09-23 04:24 GMT
  • மிட்விக்கெட் திசையில் பீல்டரை நிறுத்தாததை ரிஷப் பண்ட் கண்டார்.
  • ஒரே இடத்தில் இருந்து இரண்டு பேரில் ஒருவரை அங்கே செல்ல வைக்குமாறு கூறினார்.

இந்தியா- வங்கதேச அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி 109 ரன்கள் விளாசினார்.

2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, வங்கதேச அணியின் பீல்டிங் செட்-அப் பார்த்தபோது மிட்விக்கெட் திசையில் பீல்டர் இல்லையே... அங்கே ஒரு பீல்டரை நிறுத்துங்கள் என தனக்கு எதிராகவே வங்கதேச அணிக்காக பீல்டிங் செட் செய்தார்.

இது போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பீல்டிங் மாற்றியமைத்தது ஏன்? என்பது தொடர்பாக ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ரிஷப் பண்ட் கூறியதாவது:-

நான் முதலில் அஜய் பாய் உடன் மைதானத்தில் வெளியே (விளையாட்டு இல்லாத நேரத்தில்) பேசிக்கொண்டிருந்த போது, கிரிக்கெட் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். எங்கே விளையாடினாலும் சரி, யாருக்கு எதிராக விளையாடினால் சரி என்றார். மிட் விக்கெட் திசையில் எந்த பீல்டரும் இல்லை. மற்றொரு இடத்தில் ஒரே இடத்தில் இரண்டு பீல்டரை பார்த்தேன். ஆகவே, ஒரு பீல்டரை மிட்விக்கெட் திசைக்கு மாற்ற அவர்களிடம் கூறினேன்.

இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட்-ன் இந்த செயல் பெரும்பாலான ரசிகர்கள் இதயங்களை ஈர்த்துள்ளது.

Tags:    

Similar News