கிரிக்கெட் (Cricket)

அவங்க ஆதரவு இல்லாம சாத்தியமில்ல.. சதம் விளாசிய சஞ்சு சாம்சன் உருக்கம்

Published On 2024-10-13 02:46 GMT   |   Update On 2024-10-13 02:46 GMT
  • இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்.
  • ஏனெனில் நான் பல முறை தோற்றிருக்கிறேன்.

இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் 297 அடிக்க துவக்க வீரர் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது.

கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் 47 பந்துகளில் 111 ரன்களை விளாசினார். இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் அடங்கும். இந்தப் போட்டி முடிந்த பிறகு பேசிய சஞ்சு சாம்சன், அணியின் தலைமை தனக்கு ஆதரவளித்ததாக மனம் திறந்து பேசியுள்ளார்.

"நான் நன்றாக ஆடியதால் அணியினர் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அங்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வது வெறுப்பாக இருக்கும், ஆனால் என்னால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்."

 


"அதிக போட்டிகளில் விளையாடும் போது, அழுத்தங்கள் மற்றும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு தெரியும். ஏனெனில் நான் பல முறை தோற்றிருக்கிறேன். சிறப்பாக செய்ய முடியும் என்பதை புரிந்து கொண்டு செய்ய வேண்டிய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்."

"நாட்டிற்காக விளையாடும் போது, அழுத்தம் நிச்சயம் இருக்கும். ஆனால், சிறப்பாக ஆடி நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்கான செயல்முறையை எளிமையாக வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டேன்."

"என்ன ஆனாலும் எனக்கு ஆதரவளிப்பதாக தலைமை தெரிவித்தது. அது வெறும் வார்த்தையாக மட்டுமின்றி செயல்களிலும் வெளிப்பட்டது. கடந்த சீரிசில் இரண்டு முறை டக் அவுட் ஆகி, அடுத்து என்ன என்ற கேள்வியுடன் கேரளா சென்றேன், தற்போது நான் இங்கு இருக்கிறேன்," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News